மருந்துகள் தபால் மூலம் பெற அடிப்படை விதிமுறைகள்

1. மருந்து சீட்டில் உள்ள மாத்திரைகளை அதிக பட்சமாக மருந்து சீட்டில் உள்ள மறு வருகை தேதி (NEXT VISIT DATE) வரை அனுப்பலாம்.

Medicines can be sent for a maximum of next follow up date as printed in the prescription sheet.

2. மருந்து சீட்டில் உள்ள மறு வருகை தேதி முடிந்து விட்டால் எந்த காரணத்திற்காகவும் மருந்து அனுப்ப இயலாது. நீங்கள் மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற்ற பின் மட்டுமே மாத்திரைகளை அனுப்ப இயலும்.

If the medicine request exceeds follow up date, the patient can’t avail the medicines through postal service. Hence to get the service available they need to get the prescription updated by visiting the consultant.

3. மருந்து சீட்டில் உள்ள அனைத்து மாத்திரைகளை அனுப்ப முடியுமே தவிர எந்த காரணத்திற்காவும் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை அனுப்ப இயலாது. மேலும் உதிரி மாத்திரைகளையும் அனுப்ப இயலாது.

உதாரணத்திற்கு : 12, 17,23,37,

Postal service is not possible for any single medicine & also for loose tablets (for e.g., 12,17,23,37) but for a full course of medicines prescribed only.

4. உங்களுடைய மருந்து சீட்டை (Prescription) நீங்கள் புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். உங்களுடைய  அனைத்து அடிப்படை தகவல்களும் ( patient ID, Dr.Name, Previous follow up date/ Next follow up date ) உறுதிய செய்யப்பட்ட பின்னர் மருத்துவரின் அனுமதியின்அடிப்படையில் மருந்துகள் அனுப்பபடும். இதில் ஏதாவது எங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.

You have to send the Prescription photo. After verification of the information’s  ( Name, OP No, Consultants Name, Next Follow up date / previous follow up date) the Medicines would be sent. If there is any mismatch we will contact you for more details.

5. மருந்து சீட்டில் உள்ள மருந்துகளில் ஏதேனும் ஒரு சில மாத்திரைகள் இருப்பு இல்லையெனில் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மாற்று கம்பெனி மருந்துகள் வழங்கப்படும்.

After discussing with Consultant the alternate brand of a particular medicine will be sent if the prescribed brand is out of stock.

6. உங்கள் மருந்துக்கான தொகை மற்றும் தபால் செலவுடன் சேர்த்து பணபரிவர்தனைக்கான லிங்க் (லிங்க்) உங்களுக்கு குறுஞ்செய்தி ( MESSAGE ) அல்லது WHATSAPP மூலம் தகவல் கொடுக்கப்படும். அந்த தொகையை பணபரிவர்தனைக்கான லிங்க்-ல் சென்று செலுத்தவும். உங்களுடைய பண பறிமாற்றம் உறுதி செய்த பின்னர் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.

You will be informed by MESSAGE or WHATSAPP, the amount and postage cost of your medicines. Pay that amount to the Payment link. Medicines will be sent to you after your cash transfer is confirmed.
Contact / தொடர்புக்கு: 96 888 3 00 00