புதுக்கோட்டை மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் உள்ள T. E. L. C மேல்நிலைப் பள்ளியில் ஆத்மா மருத்துவமனை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி இணைந்து மாணவர்களுக்கு “தேர்வு பயம் மற்றும் தேர்வு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜோயல் கனகராஜ் தலைமை தாங்கினார் மற்றும் பேராசிரியர் முனைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரண் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் 320 மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்